Categories
விவசாயம்

1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம்…. வெறும் மிளகு சாகுபடியில் அசத்தி வரும் விவசாயி…. பலரும் அறியாத ஆச்சரிய தகவல் இதோ….!!!!

விவசாயத்தில் பல்வேறு புது உத்திகளைக் கையாண்டு லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கி உள்ளார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில் முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை, பொருளாதாரத்தை உயர்த்தும் அடிப்படையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளார். இவர் பலரும் செயல்படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றிக் கண்டுள்ளார். பொள்ளாச்சி மாவட்டம் ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன் புதூரில் 26 ஏக்கர் நிலத்தில் இவர் பண்ணை இருக்கிறது.

இதற்கிடையில் ஏராளமானவர்கள் ஒற்றை பயிர் முறையை பின்பற்றும் நிலையில் உங்களுக்கு பலப் பயிர் சாகுபடி செய்யும் எண்ணம் எப்படி வந்தது என அவரிடம் கேட்டபோது, இந்த இடத்தை கடந்த 2006ம் வருடம் வாங்கினேன். அப்போது இங்கு பிரதானபயிர் தென்னை ஆகும். தொடக்கம் முதலே இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆரம்பத்தில் 3 வருடங்கள் இயற்கை உரங்களை உபயோகித்தும் ஒரு மரத்தில் 110 காய்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இதையடுத்து ஈஷா விவசாய இயக்கம் குறித்து அறிந்துகொண்ட பிறகு, கடந்த 2009ம் வருடத்தில் ஈஷா குழுவினர் என் நிலத்துக்கே வந்து மண் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போதுதான் மண்ணிற்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை என்பது தெரியவந்தது. மண்ணின் கரிமஅளவு 0.5 மட்டுமே இருந்தது. அதன்பின் மண்வளத்தை அதிகரிக்க பலப் பயிர் சாகுபடி முறையை பரிந்துரைத்தனர். அதனை தொடர்ந்து வரப்போரங்களில் டிம்பர் மரங்கள், நிலத்தில் தென்னை, அதற்குள் ஊடு பயிர்களாக பல பயிர்கள் என புது உத்தியை கையாண்டோம். இவற்றில் சுமார் 1900 தென்னை, 9000 டிம்பர் மரங்கள், 700 பழமரங்கள், 100 பப்பாளி, 600 வாழை என பல பயிர்களை ஒன்றாக வளர்த்தோம். அதன் தொடர்ச்சியாக 12 வருடங்களுக்கு பின் தற்போது மண்ணிண் கரிம வளம் 3.36 என்ற நிலைக்கு உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் கூறினர்.

டிம்பர் மரங்கள் நீண்டகால வருவாய்க்கு உதவும் என்று கூறுகிறீர்கள் எனில் மற்ற நேரத்தில் விவசாயிகளுக்குரிய வருமான வாய்ப்பு பற்றி அவரிடம் கேட்டபோது “இதே கேள்வி எனக்கு இருந்தது. அப்போது அதற்கு பதில் கிடைத்தது புதுக்கோட்டையில் அந்த குழுவினர் நடத்திய சம வெளியில் மிளகுசாகுபடி சாத்தியம் எனும் கருத்தரங்கம். இங்கே சம வெளியில் மிளகை வளர்க்கக்கூடிய விவசாயிகளை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலப் பயிர் சாகுபடி வாயிலாக மிதமான காலநிலையை பண்ணையில் உருவாக்குகிற போது சம வெளியில் மிளகு சாத்தியம் என்பதை அறிந்துகொண்டேன்.

டிம்பர் மரங்களில் மிளகை ஏற்றிவிட்ட பிறகு 3ம் ஆண்டிலிருந்து காய்க்க துவங்கும். பின் 6, 7 வருடங்கள் நல்ல அறுவடை எடுக்கலாம். 1 ஏக்கரில் 400 கிலோ வரை அறுவடை செய்யமுடியும். அத்துடன் 1 கிலோ மிளகு ரூபாய்.600-ரூ.1000 வரை விற்கும். அந்த வகையில் எப்படியும் 1 ஏக்கரில் தோராயமாக ரூபாய்.2 லட்சம் வரை லாபம் ஈட்டலாம். ஆகையால் விவசாயத்தில் பயிர்கள் வெறும் மரமாக, செடியாக மட்டும் இல்லாமல், அவை வருவாய்கான பெரும் சாத்தியங்களாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |