பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கண், 2 நாக்கு மற்றும் மூக்கு இல்லாமல் ஒரு அதிசய நாய்க்குட்டி பிறந்துள்ளது.
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் இருக்கும். அதில் சில குறைபாடுகளும் உண்டு. ஆனால் வினோதமான சில உயிரினங்கள் இருப்பதை நாம் அறிந்திருப்போம். அதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு அதிசய நாய்க்குட்டி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒற்றைக் கண் உடைய அதிசய நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
அந்த நாய்க்குட்டிக்கு ஒரு கண், 2 நாக்கு உள்ளது. ஆனால் மூக்கு இல்லை. இந்த விசித்திரமான நாய்க்குட்டி பிப்ரவரி 6ஆம் தேதி பிறந்துள்ளது. ஆனால் அன்று இரவே மூச்சு சரியாக சுவாசிக்க முடியாமல் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அதிசய நிகழ்வாக இருந்தாலும் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.