Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 கிலோ இறைச்சி இவ்வளவு தானா….? அமோகமாக நடைபெறும் விற்பனை…. சந்தேகத்தை எழுப்பிய ஆர்வலர்கள்….!!

ஆட்டு இறைச்சி விலை பாதிக்கு பாதியாக குறைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த மாதத்திற்கு முன்பு ஆட்டு இறைச்சி 1 கிலோ 800ரூபாய் முதல் 900 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இறைச்சி விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ 400 ருபாய் முதல் 450 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேளம் இறைச்சியுடன் சேர்த்து தேங்காய், முட்டை போன்ற இலவசமும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்போட்டி காரணமாக இந்த விலை சரிவு என கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் இந்த விலை குறைவு சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் விலை பாதி குறைந்து இருப்பதால் இவை உண்மையிலேயே ஆட்டு இறைச்சியா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சமீப காலமாக மாவட்டத்தில் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு பல்வேறு ஆடுகள் இறந்து வரும் நிலையில் அது போன்ற ஆடுகள் விற்பனைக்கு வருகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Categories

Tech |