Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

1 கி.மீ தூரத்தில் கிடந்த உண்டியல்…. கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழமாதேவி கிராமத்தில் மிகவும் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவிலின் சுற்று வட்டார பகுதியில் உண்டியலை தேடி பார்த்துள்ளனர். அப்போது சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆற்றங்கரையில் கிடந்த உண்டியலை காவல்துறையினர் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |