தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 28 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்தது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,02,283பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,983 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 76.84 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,241 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 56,278பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,33,295 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 32 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 56,698ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 28 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை- 1021
ராணிப்பேட்டை- 382
விருதுநகர்- 348
திருவள்ளூர்- 332
செங்கல்பட்டு-331
காஞ்சிபுரம்- 322
தேனி- 305
கோவை – 227
குமரி – 215
தூத்துக்குடி-215
தி.மலை -212
கடலூர்-167
வேலூர் -134
மதுரை -106
திருச்சி-101
விழுப்புரம் – 90
புதுக்கோட்டை- 86
நெல்லை- 85
தென்காசி- 75
திண்டுக்கல்- 75
கிருஷ்ணகிரி- 67
க.குறிச்சி- 66
சேலம்- 66
சிவகங்கை- 64
ராமநாதபுரம்- 62
திருப்பூர்- 45
திருப்பத்தூர்- 44
நாமக்கல்- 43
நீலகிரி -37
நாகை- 32
அரியலூர்- 20
பெரம்பலூர் -19
கரூர்-19
தஞ்சை-18
திருவாரூர்- 18
ஈரோடு – 13
தர்மபுரி – 4