Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1 கோடியா…. 2 கோடியா…. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை… மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் சந்தோஷம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை வருடந்தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவதை  வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி இன்று  தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை  கொண்டாடபட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று  கிருஷ்ணகிரி அருகில் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் அதிகமாக வந்தனர்.

இதேபோன்று ஈரோடு, திருச்சி, வேலூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து நிறைய வியாபாரிகள் குந்தாரப்பள்ளி வாரச் சந்தைக்கு வந்து குவிந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கு அதிகமான விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் சந்தைக்கு வந்துள்ளனர். இதனால் ஆடுகளின் விலை வழக்கத்தைவிட அதிகமாக சென்றது. இதுகுறித்து விவசாயிகள் சிலர் பேசியதாவது, கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா ஊரடங்கால் யுகாதி  பண்டிகையின் காலங்களில் ஆடுகள் விற்பனை குறைவாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அரியக்கா, பெரியக்கா  கோவில் திருவிழா, யுகாதி பண்டிகை ஆகிய விழா காரணமாக சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ரூபாய் 15 ஆயிரத்திற்கு 10 கிலோ எடை கொண்ட ஆடு விற்பனை செய்து வழக்கத்தை விட அதிகமாக விற்கப்பட்டது. சுமார் பத்தாயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் ரூபாய் 10 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தார்கள்.

Categories

Tech |