நகர்மன்ற கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் டி.என் முருகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். இதற்கு நகராட்சி தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றார். இவர் அனைத்து வார்டுகளிலும் பொதுவாக இருக்கும் சீர்திருத்தப் பணிகள் ரூபாய் 3 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனையடுத்து குடிநீர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். அதன்பிறகு தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விடவேண்டும் எனவும், சொத்து வரியை சீர் செய்ய வேண்டும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து நகராட்சிக்கு ஜீப் வாங்க வேண்டும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் செலவில் நவீன தகன மேடை அமைக்க வேண்டும் எனவும், ரூபாய் 45 லட்சம் செலவில் குளம் சீரமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகரசபை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.