இந்தியாவிலிருக்கும் 2 மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “அசாம் ஆரோக்கியத்திற்கான நிதி” என்கின்ற சுகாதார திட்டத்தை கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தின் அரசு அங்கு அறிமுகப்படுத்தியது. மேலும் அத்திட்டத்தின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட நிதி மூலம் மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை பாரத் பயோடெக்கில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 1 ஆம் தேதியிலிருந்து 3 ஆம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று உத்திரபிரதேசத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.