Categories
சினிமா தமிழ் சினிமா

1 கோடி பார்வைகளை கடந்த ‘நாங்க வேற மாறி’ பாடல்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

 எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும்  ‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ என தொடங்கும் சிங்கிள் பாடல் இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியுள்ளனர். தல அஜித் அடிக்கடி கூறும் குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு போன்ற ரசிகர்களுக்கு அறிவுரைக்கூறும் வாசகங்களை வைத்து இந்த பாடல் அமைந்துள்ளது.

வெளியானது முதல்லே யூடியூப்பிலும், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சிங்கிள் பாடல்களின் முந்தைய சாதனைகளை தகர்த்தும் வருகிறது. இந்தப் பாடல் யூ டியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடும் விதமாக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நேரில் சந்தித்து கேக் வெட்டி அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.

 

Categories

Tech |