சீன அரசு உக்ரேன் நாட்டிற்கு ஒரு கோடி யுவான் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் நடக்கும் இவ்வேளையில் ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சீன நடுநிலைப்பாட்டை வகித்துவருகிறது. மேலும் உக்ரைனுக்கு அடிப்படை தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் 50 லட்சம் யுவான் அதாவது இந்திய நாட்டின் மதிப்பின்படி ரூபாய் 6 கோடி மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக சீனா கூறியது. இந்நிலையில் சீன நாட்டின் செஞ்சிலுவை சங்கம் உக்ரைனுக்கு அதிகமாக ஒரு கோடி யுவான் அதாவது இந்திய நாட்டின் மதிப்பின்படி 12 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்குவதாக சீன நாட்டின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.