Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் சிக்கனமானவை மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நல்ல பலன்களை கொண்டிருக்கிறது. மாதந்தோறும் உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் இருந்தால், இன்று உங்களுக்காக Airtel-ன் சூப்பரான திட்டத்தை தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒருமுறை ரீசார்ஜ் செய்தபின், 3 மாதங்களுக்கு மீண்டுமாக ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையானது ரூபாய்.839 ஆகும். இந்த விலை உங்களுக்கு அதிகமாக தோன்றினாலும், இவற்றில் வழங்கப்படும் நன்மைகளுக்கு முன்னால் இந்த விலை ஒன்றுமில்லை.
இத்திட்டம் மற்ற திட்டங்களை விட மிகவும் மலிவானது, 84 தினங்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு உண்மையிலேயே வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளானது வழங்கப்படுகிறது. அத்தகைய நிலையில் நீங்கள் நாட்டில் எங்கும் இலவச அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். இதற்கென நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தவேண்டியதில்லை.
இதுமட்டுமின்றி இத்திட்டத்தில் பல்வேறு சிறந்த நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் உங்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலின் சந்தாவும் வழங்கப்படுகிறது. இது தவிர்த்து வாடிக்கையாளர்களும் பல்வேறு வசதிகளைப் பெறுகின்றனர். அவற்றில் நீங்கள் Airtel extrem மொபைல் பேக்கைப் பெறுவீர்கள். Apollo 24/7 தவிர்த்து உங்களுக்கு Rewardz மினி சந்தாவும் வழங்கப்படுகிறது. Wynk மியூசிக்சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.