நீங்கள் Jio வாடிக்கையாளராக இருந்து நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்கள் எனில், இந்த 2 திட்டங்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களைச் செயல்படுத்திய பின் ஒரு ஆண்டுக்கு முழுத்தரவையும் பயன்படுத்தலாம். jioன் இந்த 2 நீண்டகால செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர்களின் விலையானது ரூபாய்.2,878 மற்றும் ரூ.2,998 ஆகும். இதில் ரூ.2,878 திட்டத்தை பற்றி பேசினால், இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் 1 ஆண்டுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவைப் பெறுகின்றனர். 1 ஆண்டு செல்லுபடியாகும் காலத்தின்படி, இத்திட்டத்தில் வாடிக்கையாளர் மொத்தம் 730gp டேட்டா அணுகலைப் பெறுவர். தினமும் டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பின், இணையவேகம் @64 Kbps ஆகக் குறைக்கப்படும். அதன்பின் ரூ.2,998 திட்டத்தை பற்றி பேசினால், இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம்.
இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் தினமும் 2 gp டேட்டாவுக்கு பதில் 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுகின்றனர். 1 ஆண்டின் படி, இத்திட்டத்தில் வாடிக்கையாளர் மொத்தம் 912.5 gp டேட்டா அணுகலைப் பெறுகின்றனர். தினமும் டேட்டா ஒதுக்கீடு தீர்ந்தபின், இணையவேகம் @64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டங்களில் பயனாளர்கள் டேட்டா வசதியை மட்டுமே பெறுவர். அழைப்பு மற்றும் sms நன்மைகளுக்கு பயனாளர்கள் மற்றொரு அடிப்படை திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது..