இந்த முறையை பயன் படுத்துனிங்கனா 1 நாளில் கருவளையம் மறஞ்சிடும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் கானலம் :
கருவளையம் போக பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பின்பற்றுவது நல்லது, இதற்க்கு காரணம் கடைகளில் விற்கும் செயற்கை ரசாயன பொருட்களால் பக்க விளைவுகள் ஏற்பட கூடும். ஆனால் நம்முடைய இயற்கை முறையில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என அனைவருக்கும் தெரியும். குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில் எவ்வாறு கருவளையத்தை நீக்கலாம் என காண்போம்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் வைட்டமின் பி அதிகம் உள்ளது மேலும் காப்பர் பொட்டாசியம் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன. உருளைக்கிழங்கு நம்முடைய கருவளையத்தை போக்க மிகவும் உபயோகமாக இருக்கும். உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்துவிட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து, 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறைந்து விடும்.
புதினா:
புதினா இலைகளில் உள்ள வைட்டமின் சி கருவளையம் போக்க மிகவும் உதவுகிறது.மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.
மஞ்சள்:
மஞ்சளில் உள்ள விட்டமின் நம்முடைய முகத்தை பிரகாசிக்கவும் மேலும் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்கவும் உதவுகிறது. இதற்க்கு மஞ்சளை எடுத்துகொண்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.