Categories
அரசியல்

1 நாள் மட்டும் தான் இருக்கு… சிக்கிய தமிழக அரசு … புலம்பும் ஆளும் தரப்பு …!!

மாணவர்களுக்கு முட்டை வழங்கும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்றால் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது எப்படி என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களில் முட்டை வழங்க வேண்டும், அதே போல மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் கேள்வி எழுப்பிய போது… மாணவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்க வேண்டியது  அவசியம் என்றும்,  தேவைப்படும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க எந்த மாதிரியான திட்டமிடலில் இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தார்.இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது… ஏற்கனவே ஏப்ரல் முதல் ஜூலை மாதங்கள் வரை சானிடரி நாப்கின் 21 லட்சத்து 50 ஆயிரம் நாப்கின்கள் செவிலியர்கள் மூலமாக தேவைப்படும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சத்துணவு திட்டத்தில் உள்ள அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வந்து முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை. ஏனென்றால் சமூக இடைவெளியை படிப்பது சிரமமாக இருக்கிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு… சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்றால் டாஸ்மார்க், மதுபான கடைகளை மூடுவதற்கு  முடிவு எடுத்துள்ளீர்களா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஒரு விஷயத்தை முடியாது என்று சொல்வதற்கு ஆயிரம் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். முட்டை வழங்குவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படுகிறது ? என்ன மாதிரியாக வழங்கலாம் என திட்டம் இருக்கிறது ? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பிற்கு உத்தரவிட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டதால் இந்த வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டுமே அரசுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  நாளை என்ன மாதிரியான முறையில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கு  அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள். ஒரு நாளில் முடிவ எடுக்க வேண்டும் என்பதால்… என்ன முடிவு எடுக்கலாம் என ஆளும் தரப்பு புலம்பி வருகின்றது.

Categories

Tech |