Categories
உலக செய்திகள் பல்சுவை

“1 மணி நேரத்திற்கு 100 விவாகரத்து” இதுமட்டுமல்ல இன்னும் பல…. பிரபல நாட்டின் சுவாரஸ்ய உண்மைகள் இதோ…!!!!

உலகிலேயே மிகவும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளுடைய பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகின் மிக முக்கிய நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது.இந்நிலையில் அமெரிக்க பற்றி நீங்கள் இதுவரை அறியாத மிக சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம். இந்த நாட்டில் அதிகாரப்பூர்வ மொழி என்று எந்த மொழியும் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இங்குள்ள மக்களில் 249 மில்லியன் மக்கள் ஆங்கில மொழியை தான் பேசுகிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி மட்டுமில்லாமல் அமெரிக்காவில் மொத்தமாக 350 மொழியில் பேசப்படுகிறது. பல மொழிகள் பேசப்படும் காரணத்தினால் அமெரிக்கா எந்த ஒரு மொழியையும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவில்லை. இங்கு 40% க்கும் மேலான குழந்தைகள் திருமணத்திற்கு முன்பே பிறந்து விடுகிறதாம். ஒரு மணி நேரத்திற்குள் 100 க்கும் அதிகமான விவாகரத்து நடக்குமாம். இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் அமெரிக்காவில் இது மிகச்சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்களும் புகைபிடிக்கலாம்.

இங்குள்ள 30% மக்கள் குண்டாகத்தான் இருப்பார்களாம். இதனால் அமெரிக்கர்கள் ஆண்டிற்கு 315 பில்லியன் டாலர்களை உடல்பருமன் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக மட்டும் செலவு செய்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில்  மொன்டானா மாநிலத்தில் மனிதர்களின் மக்கள் தொகையை விட பசுக்களின் தொகை அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் சில நிமிடங்களுக்கு ஒருமுறை வானில் விமானம் போவதைப் பார்க்கலாம். எப்போதும் 5 ஆயிரம் விமானங்கள் வானில் மேலே பறந்து கொண்டிருக்கும். பெரும்பாலும் இது வணிகம் சார்ந்த விமானங்கள் ஆகும்.

Categories

Tech |