அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரு மணி நேரத்தில் 170 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.19 கோடியைத் தாண்டியுள்ளது.இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியைத் தாண்டியுள்ளது.
இதில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டியுள்ளது. பிற நாடுகளில் ஓரளவு கட்டுக்குள் வந்தநிலையில், அமெரிக்காவில் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்துவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாதிப்புகள் இருந்தாலும் குணமடைவோரின் விகிதம் அதிகமாகவுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதில் தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4000 பேர் வரை இறந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.