திருட்டு கும்பலிடம் விவசாயி சாமர்த்தியமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உங்களுடைய இடம் செல்போன் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது அதற்காக உங்களுடைய நில பத்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு உங்கள் நிலம் செல்போன் டவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அட்வான்ஸ் பணமாக ரூபாய் 40 லட்சம் கொடுக்கப்படும் என்றும், மாதந்தோறும் ரூபாய் 40,000 வாடகை கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட விவசாயி தன்னுடைய நில பத்திரத்தை அனுப்பாமல் அதற்கு பதிலாக ஒரு போலியான பத்திரத்தை அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் விவசாயிக்கு மீண்டும் போன் செய்து உங்கள் நிலம் செல்போன் டவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு முன்பனமாக நீங்கள் 3500 ரூபாயை என்னுடைய வங்கி கணக்கில் அனுப்பிவையுங்கள். அடுத்த 1 மணி நேரத்தில் 20 லட்சம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு விவசாயி போலியான பத்திரத்தை பார்த்து செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இப்படி ஒருவரை ஏமாற்றி பிழைப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த பெண்மணியும் விவசாயியை திட்டிவிட்டு போனை ஆப் செய்து விட்டார். இந்த ஆடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.