காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் பட்டுள்ளது. தற்போது 1 மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் கோபமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சங்குபேட்டை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.