Categories
புதுச்சேரி

1 மணி நேரம்…. போனுடன் விளையாடிய குரங்கு…. வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டம்….!!

புதுச்சேரி மாவட்டத்தில் தாவரவியல் உழவர்சந்தை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் சந்தையின் அருகே இளநீர் கடையை பெண் வியாபாரி ஒருவர் நடத்தி வந்தார். அந்த பெண் வியாபாரி சிறிது அசந்த நேரத்தில் அருகில் வைத்திருந்த செல்போனை குரங்கு ஒன்று எடுத்து சென்றது.  செல்போனை எடுத்து மரத்தின் பொந்தில் வைத்துவிட்டு அதை அடிக்கடி எடுத்து பட்டனை அழுத்தி பார்த்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பெண் வியாபாரிக்கு வேறொரு வியாபாரி போன் செய்திருந்தார்.

அதன் சத்தம் கேட்டு குரங்கு செல்போனை காதில் வைத்துக் பார்த்துக் கொண்டே இருந்தது. இதை அப்பகுதியில் இருந்த மக்கள் வேடிக்கையாக  பார்த்தனர் சிறிது நேரம் கழித்து அப்பகுதில் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். குரங்கிடம் இருந்த செல்போனை வாங்க முயற்சித்த  போது அது கொடுக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கு பிறகு அருகில் இருந்த சிமெண்ட் சிலாப்பில் குரங்கு செல்போனை வைத்து விட்டு சென்றது.

Categories

Tech |