பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர், அரேபாளையம், பங்களா தொட்டி, கோட்டாடை, மாவள்ளம், குளியாடா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்துள்ளது.
இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.