Categories
மாநில செய்திகள்

+1 மாணவர் சேர்க்கைக்கான…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து +1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் மூன்றாம் வாரத்தில் பதினோராம் வகுப்புகள் தொடங்கி தொலைத்தொடர்பு முறையில் பாடங்களை நடத்த வேண்டும் என்றும், +2 மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு மூலம் பாடங்கள் நடத்தவும் தமிழக உத்தரவிட்டுள்ளது.

+1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைக்கலாம். அந்த பிரிவு சம்பந்தமாக 50 வினாக்கள் கேட்கப்படும் இந்த மதிப்பின் மூலம் பிரிவுகளை ஒதுக்கலாம். இதே அடிப்படையில் +2 சேர்க்கையும் நடைபெறும் என கூறியுள்ளது.

Categories

Tech |