நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்றும், 10 ,11 ,12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்க நாங்கள் வைத்த கோரிக்கைக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார். மேலும் ஜனவரி 24 -முதல் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது திங்கள்கிழமை பள்ளி திறப்பதாக அரசு கூறியுள்ளதால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து 1-12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் 10-15 நாட்களில் அரசு முடிவெடுக்கும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் பரவினாலும் இரண்டாம் அலையைப் போல உயிரிழப்புகள் ஏதும் பெரிய அளவில் இல்லை என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது. பல இடங்களில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. அந்தவகையில் மகாராஷ்டிராவின் பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.