தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் முடிவடைந்து வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதனை போலவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதியன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியது, 1 முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் 11 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு பள்ளியில் 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை வருகின்ற ஜூன் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரகம், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் எதுவும் இன்றி பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறினார். அதாவது கொரோனா பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மனதில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது.