1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று ஹரியானா கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் தொடரின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும் ஆலோசனை செய்து வருகின்றன.
இந்நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஹரியானா மாநில கல்வி மந்திரி கன்வார் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வருவது மிகவும் முக்கியம். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பாடம் கற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.