Categories
தேசிய செய்திகள்

1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் சமீப காலங்களாக மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆன்லைன் வகுப்புகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். நேற்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், நர்சிங் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள், நூலகங்கள் என அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |