Categories
மாநில செய்திகள்

1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….கல்வித்துறையின் மாஸ் திட்டம்….!!!!!

கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த சூழலில்  மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள்  நடத்தப்பட்டது . இதையடுத்து பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து,  1-மாத  காலம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கல்வியாண்டில்பள்ளிகள் ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்படும் எனவும் , அதே போல 10,11,12-ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில்,  மே 31-ஆம் தேதி அன்று முடிவடையும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின், அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதன் முதற்கட்டமாக சில மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி, ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு  கல்வித்துறை அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். மேலும் ஜூன் மாத இறுதியில்,பள்ளிகளை  திறக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Categories

Tech |