1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 to 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. மேலும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்கள் ஆலோசனையின்படி பள்ளிகள் திறக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.. இதனால் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்நிலையில் திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியளித்தார். அப்போது, 1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்.. பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை.. மறுபரிசீலனை இல்லை என தெரிவித்துள்ளார். நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்..