Categories
மாநில செய்திகள்

1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு…. சுழற்சி முறையில் வகுப்பு…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்தும் முடிவு எடுக்க  இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பின்னர், தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 

Categories

Tech |