இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு பிறப்பித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் விடுமுறை வழங்க நேற்று உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் நிலவும் குளிர் காலநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக குழந்தைகளின் உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல மாநிலங்களில் மூடப்பட்டுள்ளது. ஆனால் பீகார் மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்படவில்லை. இதற்கு முன்னதாக தொற்றுநோய்களின் அதிகரிப்பின் அடிப்படையில் மாநில மற்றும் பாட்னா மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு எதிர்கொண்டாலும் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து அரசு எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. மேலும் இன்று முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான வழிகாட்டுதல் அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.