தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனை அடுத்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது உள்ள பாடங்களை பெரும்பாலான பள்ளிகள் முடிக்கும் தருவாயில் உள்ளன. எனவே பள்ளிகள் திறக்கப்படும் வரை அனைத்து பாடங்களையும் ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்வில் பாடங்கள் குறைக்கப்படுமா என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் மாணவர்களை மூன்றாம் பருவத் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.