நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரியில் நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆசிரியர்கள் ஏறக்குறைய 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் 2 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் முடித்துள்ளது. அதற்கான அனுமதி பெற முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.