Categories
மாநில செய்திகள்

1 முதல் 8 பள்ளிகள் திறப்பில்…. எந்த மாற்றமும் இல்லை…. அமைச்சர் திட்டவட்டம்…!!!

தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளோடு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாணவர்கள் யாரையும் பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று கடும் கட்டுப்பாடுகளை மீறியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் குறிப்பிட்ட பள்ளிகளை சிலநாட்கள் மூடவும் பரிந்துரை செய்துள்ளது.

தமிழக அரசின் இந்த முயற்சியானது சரியான முறையில் சென்றுகொண்டிருக்கிறது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இது தொடர்பான செய்தியை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார். முதல்வரும் இதைப்பற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார் என்று அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசின் இந்த முடிவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக மறுத்துப் பேசியுள்ளார். திருச்சியில் 75வது ஆண்டு இந்திய சுதந்திர தினத்தையொட்டி 2.0 நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இது குறித்த அறிக்கையை தான் முதல்வரிடம் வழங்கியபோது அவர் கூறியது ஒன்றுதான். அது குழந்தைகள் உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் மருத்துவக் குழு என்ன சொல்கிறார்களோ? அதையே நாம் முழுமையாக கடைபிடிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |