Categories
மாநில செய்திகள்

1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா  பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல்  குறைய தொடங்கியதை  தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடிப்படையில் புதுச்சேரியில் அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதனையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டமும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2ம் வரை மாநில பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் கோடை வெயில் தொடங்குவதற்குள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.

இந்த கோரிக்கையை ஏற்று 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வை வரும் 25 ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடத்திட முடிவு செய்து, தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. இது பற்றி  புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பள்ளி அளவில் தயாரித்துக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி அளவில் விடைத்தாள்களை திருத்தி, தேர்ச்சி பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 9:30 மணியில் இருந்து 11:30 மணி வரையிலும், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |