Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

1 முறையாவது…. என் வீட்டில் வந்து ரெய்டு பண்ணி பாருங்களேன் – சீமான் சவால்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகின்றது. அந்தவகையில் நாதக  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே அந்த பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொன்டு வருகிறார். அப்போது பேசிய அவர், 50 வருடங்களாக திராவிட கட்சிகள் பிரச்சினைகளை தீர்ப்பதாக பேசிக்கொண்டு தான் இருக்கின்றன.

நான் ஆட்சிக்கு வந்தால் சொல்ல மாட்டேன். செயலில் ஈடுபடுவேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஒரு முறையாவது வருமானவரித்துறையினர் என்னுடைய வீட்டில் சோதனை நடத்தி பார்க்க வாருங்களேன் என்று சவால் விடுத்துள்ளார்.

Categories

Tech |