ஓகினாவா நிறுவனம் புதிய மின்சார பைக்கை மார்ச் 24 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஒகினாவா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரினை இந்தியாவில் வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கு ஓகி90 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் எக்ஸ்டென்டட் சீட்டுகள், அலாய் வீல், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்பக்க கிராப் ரெயில், டூயல் ஸ்பிரிங் சஸ்பென்சன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் பிற ஸ்கூட்டர்களை போல மவுண்ட் செய்யப்பட்ட ஹப் யூனிட்டில் மோட்டார் வைக்கப்படாமல் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 80 கி.மீ வரை டாப் ஸ்பீட்டை கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுதாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ முதல் 180 கி.மீ வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டரில் ஜியோஒ-ஃபென்சிங், நேவிகேஷன், டயக்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஓலா எஸ்1, சிம்பிள் ஒன், பஜாஜ் சேடாக், டிவிஎஸ் ஐகியூப் ஆகியவற்றுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ1.20 லட்சம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.