Categories
தேசிய செய்திகள்

“1 ரூபாயா பிச்சை போடுற” கடுப்பான பிச்சைக்காரர்…. பெண்ணின் காலில் ஒரே குத்து…. பெரும் பரபரப்பு…!!!

பிச்சைக்காரர் ஒருவர் ஒரு ரூபாய் பிச்சை போட்ட பெண்ணை  தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனியைச் சேர்ந்தவர் பாலு. மாற்றுத்திறனாளியான இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவ்வழியாக வந்த பெண்ணிடம் யாசகம் கேட்டுள்ளார் பாலு. அப்போது அந்த பெண்மணி 1 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் காலில் விழுந்த யாசகர் பாலு, தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் பெண்ணில் காலில் குத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து, யாசகர் பாலு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைக்கண்ட மாணவர்களும், மற்றொரு பெண்ணும் பாலுவை விரட்டிப்பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். மேலும் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட பெண் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |