Categories
அரசியல் மாநில செய்திகள்

1 லட்சம் பேர் வந்தாங்க…! தேர்தலில் பாருங்க தெரியும்…. பிஜேபினா யாரு ? மோடினா யாருனு ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றாம் தேதி, இரண்டாம் தேதி, மூன்றாம் தேதி, நான்காம் தேதி இந்த நான்கு நாட்களில் கூட போராட்டக்காரர்கள் வருவார்கள் என்று சொல்லி மத்திய அரசிலிருந்து போராட்டக்காரர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு என  மாநில அரசுக்கு தெரிவித்தும் கூட மாநில அரசு டிஜிபி நாங்கள் கிளியர் பண்ணி விட்டோம், எல்லாம் சரியாக இருக்கிறது என்று உத்தரவு கொடுத்த பிறகுதான் பிரதமர் வாகனம் அந்த வழியை தேர்வு செய்கிறது.

டிஜிபினுடைய வார்த்தை நம்ப முடியாது என்றால் மாநிலத்தில் யாரு வார்த்தையை நம்புவது ? ஒரு மாநிலத்தின் டிஜிபி அவர்கள் போன் மூலமாக நாங்க எல்லோருமே கிளியர் பண்ணி விட்டோம் என்று சொன்னதற்கு பிறகு உள்துறை அமைச்சகத்தில் இருக்கக்கூடிய ஒரு இன்ஸ்பெக்டர் வார்த்தையை விட ஒரு மாநிலத்தின் உடைய டிஜிபினுடைய வார்த்தைதான் உச்சபட்ச வார்த்தை. அவர் சொல்லித்தான் அந்த காண்வாய் புறப்பட்டு போச்சு.

பஞ்சாப் உளவுத்துறை அறிக்கையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு மேலாக வரப்போகிறார்கள். அதிகமாக போலீஸ் செக்யூரிட்டி போடுங்க. பத்தாயிரம் பேர் போடுங்க என சொல்லி பத்தாயிரம் போலீஸ் போட்டிருந்தார்கள். வந்தது ஒரு லட்சம் பேர் வந்திருந்தாங்க. பாரத பிரதமரின் உடைய பயணம் என்பது இரண்டு மணி நேரம் தாமதமாகி, அதன்பிறகு ரோட்டில் ஒன்றரை மணி நேரம் சென்று,

பிரதமர் 20 நிமிடம் காத்திருந்து நான்கு மணி நேரத்திற்கு பின்னாடி பாரதப்பிரதமர் இன்றைக்கு வரமுடியாது அதற்காக மன்னிப்புக் கோருகின்றோம் என்று மத்திய அமைச்சர்  மன்சூக் மாண்டவ் மேடையிலிருந்து சொன்னார், நான்கு மணி நேரம் கழித்து…  நான்கு மணி நேரம் அந்த கடும் குளிரில் மக்கள் பொறுமையாக பாரதப்பிரதமருக்காக காத்திருந்தார்கள். அதனால் சப்பைக்கட்டு கட்டுவதற்கு எத்தனை காரணங்களை காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்களோ… அதற்க்கு இதுவும் ஒரு காரணம்.

பாம் வெடிச்சுதா ? கல்லெடுத்து அடிச்சாங்களா ? அப்படி என்கிற காரணத்த்தில் இதையும் ஒரு காரணமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். யூடியூப்பில் வீடியோவை பார்த்தீர்கள் என்றால், அந்த நிகழ்ச்சியில் அம்ரிந்தீர் சிங்ஜி பாரதப் பிரதமர் பேசுவதற்கு முன் அவர் பேச வேண்டும், பேசினார் 2மணி நேரத்துக்கு முன்னாடி, அப்போ இருந்த கூட்டத்தை நீங்க பாருங்க எவ்வளவு பேர் இருந்தார்கள் ? என்று.

இன்றைக்கும் பஞ்சாபின் உடைய தேர்தல் முடிவுகள் வரும்போது நமக்கு தெரியும். நிச்சயமாக பிஜேபி, பாரதப்பிரதமர் எங்கிருக்கிறார் என்று…  ஆனால் இது நிச்சயம் மன்னிக்க முடியாத ஒரு குற்றம், பஞ்சாப் அரசு செய்திருப்பது. அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி செய்திருப்பது என விமர்சித்தார்.

Categories

Tech |