தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். 1,00,000 மின் இணைப்பு திட்டத்தில் எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி விவசாயி மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மட்டும் தேர்தல் முடிந்த பிறகே விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.