அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து கேரளா நோக்கி கெங்கராஜன் என்பவரால் லாரி ஓட்டி வரப்பட்டது. தியாகதுருகம் புறவழிச்சாலையில் அந்த லாரி வந்தபோது எதிரே வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவருடைய கார் மீது மோதியது. பின்னர் அந்த லாரி எதிரே வந்த திருக்கழுக்குன்றத்தை சார்ந்த மாணிக்கம், ராணி, அமிர்தம்மாள் ஆகியோர் பயணித்து வந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அமிர்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மாணிக்கம், ராணி, பர்வீன் பானு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் கெங்கராஜன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.