வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கடையை அடைத்துவிட்டு சென்ற வியாபாரியிடம் இருந்து புவனேஷ் 1300 ரூபாயை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அந்த வியாபாரி நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 1 வருடமாக தலைமறைவாக இருந்த புவனைஷை நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.