திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கூலி தொழிலாளி இரவில் வீட்டிற்கு கஞ்சா மற்றும் மது போதையில் வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென குழந்தை அழுததால் தொழிலாளியின் மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்களது குழந்தைக்கு கணவரே பாலியல் தொந்தரவு அளித்ததை அறிந்து பெண் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தனது குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதுகுறித்து தனது கணவர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கூலி தொழிலாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.