அதிமுகவுக்கு நான் தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி முனுசாமி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த பின்பு, மரியாதைக்குரிய அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலே ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறது. இதில் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற ஆதங்கத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சிறு கூட்டம் தூண்டுதலின் பெயரால் இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் சொல்லிக்கொண்டு,
கழகத் தொண்டர்களை குழப்பிக் கொள்வதும், மற்றவர்களிடத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அந்த முயற்சி தோற்கடிக்கப்படும். ஏனென்று சொன்னால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம்,
அவர்கள் இருவரின் ஆசியிலும், அவர்களின் வளர்ப்பிலும் வந்த இந்த 1 1/2 கோடி தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற குழப்பங்களுக்கு எல்லாம் வாய்ப்பு இருக்காது. அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் அளவிலே சொல்லிக்கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம். அந்த முயற்சி நிச்சயமாக வெற்றி பெறாது என தெரிவித்தார்.