Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

500-க்கும் மேற்பட்ட…. 1 1/2 கோடி ரூபாய்க்கு விற்பனை…. வியாபாரியின் தகவல்….!!

பொய்கை சந்தையில் பெரும்பாலான கறவை மாடுகள் மற்றும் கால்நடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மாட்டுச்சந்தை அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாட்டுச்சந்தை ஏற்படுத்தப்பட்டு பெரும்பாலானோர் கறவை மாடுகள், மற்ற கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் விலை உயர்ந்த கறவைமாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு 1 கோடி முதல் 1 1/2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை காய்கறி சந்தை நடைபெற்றது. இந்த வாரம் முதல் ஏலம் எடுத்த உரிமையாளர்கள் சந்தையில் கடை போட்ட வியாபாரிகளிடம் சுங்கவரி வசூல் செய்துள்ளனர்.

Categories

Tech |