Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1 1/2 ஆண்டுகளாக….. எந்த வழக்கும் நடக்கல…. பொதுமக்கள் குற்றசாட்டு….. வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்…!!

நீலகிரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில்  நீதித்துறை நடுவர் மன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதைத்தவிர பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. இந்த  நீதிமன்றத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளாக நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கடந்த 1 ½ வருடத்தில் போடப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்குகள் மட்டும் அருகாமையில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் வழக்கு தொடர்ந்த மற்றும் வழக்குகளை நம்பியிருந்த பாமர மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு முறை மனுக்கள் அளிக்கப்பட்டும், உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்பும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்காக பல்வேறு போராட்டங்களை வழக்கறிஞர்கள் சங்கமும் முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் ஈடுபட்டது. இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,

கடந்த 1 ½ ஆண்டுகளாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும்,  நான்கு ஆண்டுகளாக கூடலூர் சார்பு நீதிமன்றத்திலும் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு முறை இது குறித்து வலியுறுத்தியும் பொதுமக்கள் அவதி குறித்து அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தவறினால் எங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |