Categories
மாநில செய்திகள்

1- 12 ஆம் வகுப்பு வரை ….!! நேரடி வகுப்புகள் கட்டாயம்….!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசியின் பயன்பாட்டால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுக்கவே பழையபடி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மீண்டும் பள்ளிகளை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு பெற்றோர்களிடையே ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகளும் வலுவாக கிளம்பின. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு கட்டாயம் வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள் வகுப்புக்கு வராத பட்சத்தில் அதற்காக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |