தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையொப்ப பயிற்சி அளிப்பதற்கு இரண்டு வரி நோட்டு, கட்டுரை பயிற்சி எடு, கணிதப் பாடத்துக்கு வடிவியல் ஏடு, வரைபட ஏடு மற்றும் அந்தந்த பாடங்களுக்கான தனித்தனி நோட்டுகள் என ஒரு மாணவருக்கு 10 நோட்டுகள் வரை பள்ளி கல்வித்துறை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த நோட்டு புத்தகங்கள் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை, மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்றார் போல் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் நிகழாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் அரசு பள்ளிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. மேலும் மாணவ மாணவிகள் கடைகளில் 250 முதல் 500 வரை செலவு செய்த நோட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே காலதாமதம் இன்றி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்யவும், ஆகஸ்ட் இறுதிக்குள் விலையில்லா சீருடை, புத்தகப்பை உள்ளிடவற்றை வீடியோகிக்கவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.