கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.கே விதியில் சுப்ரதா பாரிக் என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆர்டரின் பெயரில் தங்க கட்டியை வாங்கி சென்று தங்க நகையை வடிவமைத்து தரும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தபஸ் சமந்தா 22 லட்சம் மதிப்புள்ள 1/2 கிலோ தங்கக் கட்டியை வாங்கி ஒரு வாரத்தில் கம்மல்கள் செய்து தருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் தங்க கட்டியுடன் சொந்த ஊருக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்ரதா பாரிக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மைசூரில் பதுங்கியிருந்த தபஸ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது அக்காள் கணவர் சாமல் ஆகிய இருவரையும் கைது செய்து 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 182 கிராம் நகைகளை மீட்டனர். மீதமுள்ள நகைகளை மீட்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.