Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1/2 கி.மீ தூரத்திற்கு கேட்ட பயங்கர சத்தம்…. ஆடிட்டர் உள்பட 3 பேர் படுகாயம்….. சென்னையில் பரபரப்பு…!!

கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ஆடிட்டரான அகமது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலை நேரத்தில் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அகமது, அவரது மனைவி நாகமுனிஷா, சகோதரி மலிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்துவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கேஸ் பரவி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் நாகமுனிஷா பால் காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிலிண்டர் வெடித்த சத்தம் 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |