திருப்பத்தூரில் காணாமல் போன குழந்தையை அரை மணி மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்புல குண்டா பூசாரி வட்டம் எனும் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் இருவரும் தங்களுடைய 2 வயது குழந்தை பிரேம்குமாருடன் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே இருக்கும் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது குழந்தை பிரேம்குமார் காணாமல் போய்விட்டான். உடனே அந்த பகுதியில் குழந்தையை தேடிக்கொண்டிருந்த போது பாஜக கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் போன்றோரிடம் குழந்தை காணாமல் போனது பற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக போலீசாரை வரவழைத்து நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் வழியாக செல்லும் பாலத்தின் அருகே குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த குழந்தை எப்படி அங்கு சென்றது. குழந்தை கடத்தும் கும்பல் கைவரிசை என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் காணாமல் போன அரை மணி நேரத்தில் குழந்தை மீட்டுக்கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.