Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

+1… +2…. மாணவர்கள் கவனத்திற்கு….. இந்த தப்ப பண்ணிடாதீங்க….. அப்புறம் 3 வருஷம் வருத்தப்படுவீங்க….!!

தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் அடுத்த 3 வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு வாரிய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கும்,  மார்ச் நான்காம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக பொதுத் தேர்வின் பொறுப்பாளரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் இணை இயக்குநருமான சசிகலா கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், பள்ளிக்கு வெளியில் நிற்கும் வாட்ச்மேன் முதல் உள்ளே சுற்றித்திரியும் பறக்கும்படை வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கைடு கொடுக்கப்படும். அதில்,

அவரவர் கடமைகள் குறித்தும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட விதி முறைகள் குறித்தும் தெளிவாக பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். அதனை படித்து முறையாக பின்பற்ற வேண்டும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஒழுங்கீன செயலில் ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

மீறினால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி ரத்து செய்து விடுவோம் என்ற தண்டனையையும் முறையாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு தேர்வில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒரே பள்ளியில் பணி ஆணையம் வழங்காமல் வேறு பள்ளிக்கு மாற்றி ஆணையம் வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |